/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழையால் கைகுலான் ஊருணி நிரம்பியதால் கல்துாண் மறைந்தது
/
மழையால் கைகுலான் ஊருணி நிரம்பியதால் கல்துாண் மறைந்தது
மழையால் கைகுலான் ஊருணி நிரம்பியதால் கல்துாண் மறைந்தது
மழையால் கைகுலான் ஊருணி நிரம்பியதால் கல்துாண் மறைந்தது
ADDED : டிச 14, 2025 06:31 AM

தொண்டி: தொண்டி கைகுலான் ஊருணி நிரம்பியதால் நீர் உயரத்தை காட்டும் 20 அடி உயரமுள்ள கல்துாண் மறைந்தது. தொண்டி கிழக்கு கடற்கரை சாலை ஓரம் அமைந்துள்ளது கைகுலான் ஊருணி.
மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ஊருணியை மக்கள் குளிக்க பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஊருணியில் நீர் உயரத்தை காட்டும் வகையில் 20 அடி உயரமுள்ள கல் துாண் உள்ளது. பருவமழையால் நீர் நிரம்பியதால் கல்துாண் மறைந்தது. அப்பகுதி மக்கள் கூறியதாவது:
அதிக பரப்பளவை கொண்ட ஊருணி இந்த ஆண்டு பெய்த பருவ மழையால் முழுமையாக நிரம்பியது. இந்த ஊருணிக்குள் நீர் அளவை காட்டு 20 அடி உயரமுள்ள கல்துாண் உள்ளது. மழையால் நிரம்பியதால் அந்த கல்துாண் மறைந்தது.
பண்டைய காலத்தில் நீர் நிரம்பியதை காட்டும் வகையில் படகில் சென்று அந்த கல்துாணில் வண்ண கொடி கட்டப்படும். தற்போது அந்த வழக்கத்தை யாரும் பின்பற்றுவதில்லை.
இந்த ஊருணி நிறைந்ததால் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் குடிநீராக பயன்படுத்தப்பட்டு தற்போது குளிக்க பயனபடுத்தபடுகிறது. ஊருணியை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

