/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
செய்யது அம்மாள் பள்ளி மாணவர்கள் ஹாக்கி போட்டியில் மாநில சாம்பியன்
/
செய்யது அம்மாள் பள்ளி மாணவர்கள் ஹாக்கி போட்டியில் மாநில சாம்பியன்
செய்யது அம்மாள் பள்ளி மாணவர்கள் ஹாக்கி போட்டியில் மாநில சாம்பியன்
செய்யது அம்மாள் பள்ளி மாணவர்கள் ஹாக்கி போட்டியில் மாநில சாம்பியன்
ADDED : செப் 26, 2024 04:47 AM

ராமநாதபுரம்: தமிழக அளவில் நடந்த 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி போட்டியில் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.
தமிழக அளவில் நடந்த 16 வயதிற்குட்பட்ட சப்-ஜூனியர் போட்டிகளில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்றன. செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. செய்யது அம்மாள் அறக்கட்டளை, மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பில் பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.
அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா தலைமை வகித்தார். ஹாக்கி சங்க மாவட்டத்தலைவர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலை வகித்தார். செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா வரவேற்றார்.
கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், இந்திய ஹாக்கி அணி முன்னாள் தலைவர் ரியால் நபி முகமது வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும், விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினர்.
அவர்கள் பேசுகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் விளையாட்டு ஆர்வலர்களின் பங்களிப்பால் சர்வதேச தரத்தில் வேலுமாணிக்கம் ஹாக்கி மைதானம் அமைந்துள்ளது. மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி உங்களின் விளையாட்டு திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழக அளவில் ஹாக்கி சப்-ஜூனியர் அணியில் செய்யதுஅம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இவ்வீரர்கள் தொடர்ந்து பயிற்சி பெற்று இந்திய அணியில் இடம் பெற வேண்டும் என்றனர்.
வேலுமாணிக்கம் அறக்கட்டளை வேலு மனோகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார், பயிற்சியாளர்கள் கிழவன் சேதுபதி, மணிகண்டன், செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் செய்யதா, பாத்திமா, ராஜாத்தி, ஷிபா பாபு, செய்யது இப்ராஹிம், செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன், மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஹாஜாமுகமது, பேராசிரியர் கார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர். டாக்டர் ஹாரிஸ் அப்துல்லா நன்றி கூறினார்.