ADDED : ஜன 28, 2026 05:29 AM

அ நிறம் | அளவு
திருவாடானை: திருவாடானை பகுதி வயல் வெளிகளில் மாலை நேரத்தில் கதிரவன் மறையும் எழில் மிகு காட்சி காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
திருவாடானை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது அறுவடை சீசன் களைகட்டியுள்ளது. நேற்று முன்தினம் அழகமடை வயல் வெளியில் மாலை நேரத்தில் மேகக் கூட்டங்களுக்கு இடையே சூரியன் விடைபெறும் போது வானம் செந்நிறத்திலும், தங்கம் போல தகதகத்தது.அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்கதிர்கள் மீது மறையும் சூரியனின் கதிர்கள் பட்ட போது வயல்வெளி முழுவதும் தங்கம் போல் ஜொலித்தது. இந்த ரம்மியமான காட்சியைப் பார்த்த வாகன ஓட்டிகளும், இளைஞர்களும் சாலையோரம் நின்று ரசித்ததுடன் அலைபேசியில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தனர்.
