ADDED : பிப் 17, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கொம்பூதி கண்மாய் கரையோரத்தில் 250 ஆண்டுகளான புளியமரம் இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் கண்மாய் நிரம்பியுள்ள நிலையில் கண்மாய் கரையோரம் நீர் பிடிப்பால் பலமிழந்து சாய்ந்து விழுந்தது. அச்சமயத்தில் யாரும் இல்லாததால் பாதிப்பு இல்லை.
கொம்பூதி கிராம மக்கள் கூறுகையில், மிகவும் பழமை வாய்ந்த புளிய மரம் சாய்ந்து விழுந்தது வருத்தம் அளிக்கிறது. எங்களது கிராமத்தில் நீண்ட கால அடையாளமாக விளங்கிய புளியமரம் தானாகவே விழுந்துள்ளது என்றனர்.