/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொட்டி நிறைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது
/
தொட்டி நிறைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது
தொட்டி நிறைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது
தொட்டி நிறைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது
ADDED : ஏப் 16, 2025 08:33 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் நீர்தேக்கத் தொட்டியில் மோட்டரை இயக்கிவிட்டு பணியாளர்கள் சென்று விட்டதால் பல லட்சம் லிட்டர் குடிநீர் கீழே வடிந்து வீணாகியது.
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் செல்லும் வழியில் லேத்தஸ் பங்களா ரோட்டில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட நீரேற்றும் நிலையம் உள்ளது. இங்கிருந்து 15 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றுவதற்காக மோட்டாரை இயக்கிய பணியாளர்கள் சில மணி நேரம் அப்படியே விட்டுவிட்டனர்.
இதனால் தொட்டி நிறைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் கீழே வழிந்து வீணாகியது. நகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் முழுமையாக கிடைக்காத நிலையில் இதுபோல் கோடை காலத்தில் குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.