நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் திரவுபதி அம்மன் கோயில் விழாவில் பல்வேறு கிராம மண்டகப்படி நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
சக்தி கரகம், தர்மர் பிறப்பு, கிருஷ்ணர் பிறப்பு, திரவுபதி திருக்கல்யாணம் உள்ளிட்டவை நிறை வடைந்த நிலையில் சப்பாணியேந்தல் கிராமத்தாரின் மண்டகப்படியாக சக்ராபர்ணகோட்டை நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக கிராமத்தார் சார்பில் மூலவர் அம் மனுக்கு அபிஷேக ஆரா தனைகள் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.