/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் தினைக்குளம் சுகாதார நிலையம்
/
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் தினைக்குளம் சுகாதார நிலையம்
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் தினைக்குளம் சுகாதார நிலையம்
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் தினைக்குளம் சுகாதார நிலையம்
ADDED : டிச 06, 2024 05:16 AM
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சியில் உள்ள அரசு துணை சுகாதார நிலையம் 1982ல் கட்டப்பட்டது. அதன் பிறகு 2015 வரை செயல்பாட்டில் இருந்தது.
கட்டடத்தின் கூரை பூச்சு மற்றும் அனைத்து பகுதிகளும் சேதமடைந்ததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டடம் அகற்றப்பட்டு ரூ. 30 லட்சத்தில் தினைக்குளம் அரசு துணை சுகாதார நிலையம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. செவிலியர் குடியிருப்பும் உள்ளது. கட்டடப் பணிகள் முடிந்து நான்கு மாதங்களுக்கு மேலாகிறது. அப்பகுதி மக்கள் கூறியதாவது:
தினைக்குளம் அரசு துணை சுகாதார நிலையத்தில் தினமலர் நாளிதழ் செய்தியின் எதிரொலியாக பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்த வேண்டும் என்றனர்.