/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மரங்களின் மீது ஆணி வைத்து அடிக்கும் போக்கு தொடர்கிறது விழிப்புணர்வு தேவை

ADDED : செப் 05, 2025 11:17 PM
சிக்கல்: சிக்கல் மற்றும் ஏர்வாடி தர்காவிற்கு உட்பட்ட நகர் பகுதிகளில் பெரும்பாலான மரங்களின் மீது ஆணி வைத்து அடிக்கும் போக்கு தொடர்கிறது.
வர்த்தக மற்றும் கல்வி நிறுவனங்களின் விளம்பர பதாகைகளை மரங்களில் ஐந்திற்கும் மேற்பட்ட ஆணிகள் மூலமாக அடித்து அமைக்கின்றனர்.
இதே போல் மின் வாரியத்திற்கு சொந்தமான மின்கம்பங்களில் இருபுறங்களிலும் விளம்பர பதாகைகளை கட்டி வைக்கின்றனர். இதனால் மின் கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அவற்றின் மீது ஏறி சரி செய்வதிலும் சிரமம் ஏற் படுகிறது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
சிக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு பூவரசு, பனைமரம், ஆலமரம், அரசமரம், புங்கை மரம் உள்ளிட்ட நன்கு வளர்ந்த மரங்களின் மீது பார்வையில் படுமாறு ஆணியால் வைத்து அடித்தும் இரும்பு கம்பி யால் சுற்றி வைத்து கட்டுகின்றனர். இதனால் மரங்களின் வளர்ச்சி தடைபடுவதுடன் மரங்கள் பட்டுப் போகும் அபாயம் நிலவுகிறது. எனவே இது குறித்த விழிப்புணர்வு அவசியத் தேவையாக உள்ளது என்றனர்.