/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் முப்பெரும் விழா
/
முதுகுளத்துாரில் முப்பெரும் விழா
ADDED : செப் 20, 2025 03:43 AM
முதுகுளத்துார்: -முதுகுளத்துாரில் விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் இளைஞர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா உற்ஸவமூர்த்தி, சுந்தர விநாயகர் கோயில் வருடாபிஷேக விழா, விஸ்வகர்மா ஜெயந்தி விழா, 5ம் ஆண்டு முளைப்பாரி விழா நடந்தது.
பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். சுந்தர விநாயகர் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து விஸ்வகர்மா உற்ஸவமூர்த்திக்கு பால் அபிஷேகம் நடந்தது.108 விளக்கு பூஜை நடந்தது.
கணபதி ஹோமம், சிறப்பு யாகசாலை பூஜை நடந்தது.
சுந்தர விநாயகர், விஸ்வகர்மா உற்ஸவமூர்த்திக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட பொருட்களால் அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
முளைக்கொட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி துாக்கி பஜார், முருகன் கோயில், செல்லிஅம்மன் கோயில் உட்பட முக்கிய விதிகளில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தண்ணீரில் கரைத்தனர். மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
ஏற்பாடுகளை விஸ்வகர்மா ஐந்தொழிலாளர்கள் இளைஞர் சங்கம் செய்தனர்.