/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கழிவு நீர் கால்வாயில் விழுந்தவர் பலி
/
கழிவு நீர் கால்வாயில் விழுந்தவர் பலி
ADDED : செப் 22, 2024 03:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் டி-பிளாக் அருகே மாவட்ட மைய நுாலகம் பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீர் கால்வாயில் விழுந்தவர் பலியானார். அவரது உடலை கேணிக்கரை போலீசார் மீட்டனர்.
விசாரணையில் அவர் பனைக்குளம் அருகே சோகையன்தோப்பு திருக்குமரன் 45, என தெரிந்தது. இவர் சென்னையில் பரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். விடுமுறைக்கு வந்தவர் மது போதையில் கழிவு நீர் கால்வாயில் விழுந்து இறந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.