ADDED : நவ 02, 2024 08:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்,:ராமநாதபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் மருதுபாண்டி 55. இவரது மனைவி முனீஸ்வரி 50. இருவரும் சொந்த கிராமமான கருத்தனேந்தலுக்கு சென்று அங்கு கோயில் திருவிழாவிற்கு முத்து பரப்பி விட்டு ஆக.6ல் டூவீலரில் வீடு திரும்பினர்.
பின்னால் ரெகுநாதபுரம் பகுதியை சேர்ந்த சங்கிலி மகன் ராஜூ ஓட்டி வந்த கார் டூவீலர் மீது மோதியது.
இதில் மருதுபாண்டியும், முனீஸ்வரியும் தலையில் காயமடைந்தனர்.
இதில் மருதுபாண்டி மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலியானார். சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.