/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அயோத்தி ராமர் கோயில் 500 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி பா.ஜ., துணைத்தலைவர் பேட்டி
/
அயோத்தி ராமர் கோயில் 500 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி பா.ஜ., துணைத்தலைவர் பேட்டி
அயோத்தி ராமர் கோயில் 500 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி பா.ஜ., துணைத்தலைவர் பேட்டி
அயோத்தி ராமர் கோயில் 500 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி பா.ஜ., துணைத்தலைவர் பேட்டி
ADDED : ஜன 04, 2024 12:56 AM

ராமநாதபுரம்:''அயோத்தி ராமர் கோயில் 500 ஆண்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவை இந்த நுாற்றாண்டின் மிகப்பெரிய சாதனைகள் ஆகும்'' என, ராமநாதபுரத்தில் பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
திருச்சி வந்த பிரதமர் மோடி ரூ.20,000 கோடி திட்டங்களை வழங்கியுள்ளார். 2004 முதல் 2014 வரை ஆட்சியில் இருந்த தி.மு.க., இடம் பெற்ற மத்திய காங்., அரசு ரூ.30 லட்சம் கோடி மட்டுமே தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு வழங்கியது.
தமிழகத்தில் குந்தா நீர் மின் திட்டம், வடசென்னை அனல் மின் நிலையம் 3 வது அலகு, உடன்குடி அனல் மின் நிலையம் ஆகியவற்றை 2 ஆண்டுகளுக்கு முன்பாக முடித்திருக்க வேண்டும். இதன் மூலம் 2600 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டங்களை செயல்படுத்தினால் தனியாரிடம் மின்சாரம் வாங்க தேவையில்லை. தி.மு.க., அரசுக்கும், மின் பகிர்மான கழகத்திற்கும் இடையிலான இடைவெளியால் இத்திட்டங்கள் கிடப்பில் உள்ளன. முதல்வர் ஸ்டாலின் பேரிடர் நிவாரணமாக ரூ.ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடி வேண்டும். மத்திய அரசு ரூ.5 ஆயிரம் கோடி வழங்கியுள்ளது என்றார். இதில் தி.மு.க., அரசு அரசியல் செய்கிறது. பேரிடர் நிவாரண நிதியில் இந்தியா முழுவதற்கும் ரூ.8 ஆயிரம் கோடி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து திட்டங்களிலும் ஊழல் நடந்துள்ளது. நுாறு நாள் வேலை திட்டத்தில் போலியாக இருந்த பெயர் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம், பராமரிப்பு பணிகள் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளது. பா.ஜ., அரசு நுாற்றாண்டு சாதனையாக காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து பிரிவு 370ஐ ரத்து செய்தது. 500 ஆண்டு கால போராட்டத்திற்குப்பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டு ஜன., 22ல் கும்பாபிேஷகம் நடக்கவுள்ளது என்றார். மாவட்ட தலைவர் தரணிமுருகேசன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.