/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெருமாள் பூப்பல்லக்கில் பவனி திருக்கல்யாண விழா நிறைவு
/
பெருமாள் பூப்பல்லக்கில் பவனி திருக்கல்யாண விழா நிறைவு
பெருமாள் பூப்பல்லக்கில் பவனி திருக்கல்யாண விழா நிறைவு
பெருமாள் பூப்பல்லக்கில் பவனி திருக்கல்யாண விழா நிறைவு
ADDED : ஏப் 16, 2025 10:37 PM

பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் பங்குனி திருக்கல்யாண நிறைவு விழாவில் பூப்பல்லக்கில் பெருமாள் வீதி உலா வந்தார்.
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம் நடந்தது. ஏப்.,11 காலை 10:25 மணிக்கு சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாணம் நிறைவடைந்து விவாஹ சடங்குகள் 5 நாட்கள் நடந்தது.
இதன்படி ஏப்.,14ல் பெருமாள், தாயார் மாற்றுத் திருக்கோலத்தில் இருந்தனர். நேற்று முன் தினம் இரவு 7:00 மணிக்கு பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வீதி உலா வந்தார்.
l எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பூப்பல்லக்கில் தாயாருடன் பெருமாள் வீதி உலா வந்தார். ஏராளமானவர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.