/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேன் சுற்றும் காற்று வராது.. லைட் எரியுது வெளிச்சமில்லை: சிறுநாகுடி மக்கள் அவதி

ADDED : மே 30, 2025 11:40 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிறுநாகுடி ஊராட்சியில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக பேன் சுற்றினாலும் காற்று வராது. லைட் எரிந்தாலும் வெளிச்சம் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம்தாலுகாஆனந்துார் துணை மின் நிலையம் மூலம் ஆனந்துார், ராதானுார், திருத்தேர்வலை, ஆயங்குடி, சிறுநாகுடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சிறுநாகுடி ஊராட்சிக்குட்பட்ட சிறுநாகுடி, பாப்பாகுடி, புத்துார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி கிராமங்களில் குறைந்த மின்னழுத்த பிரச்னையால் அப்பகுதி கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், பேன் சுற்றினாலும் காற்று வராது. லைட் எரிந்தாலும் வெளிச்சம் இருக்காது. இந்த நிலையில் தான்இப்பகுதி கிராமங்களின் நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குறைந்த மின்னழுத்த பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.