ADDED : ஜூலை 29, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் சமஸ்தான சேதுபதி மன்னர்களின் வாரிசான மறைந்த ராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதியின் மகன் இளைய மன்னர் நாகேந்திரன் சேதுபதி, அவரது தாய் ராணி லட்சுமி குமரன் சேதுபதியுடன் அ.தி.மு.க.,வில் இணைந்தார்.
அவர்களுக்கு அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி அடிப்படை உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முனியசாமி, மாணவரணி துணைச் செயலாளர் செந்தில் குமார் உடன் இருந்தனர்.

