/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
/
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் கைது
ADDED : ஜன 30, 2024 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார், -கமுதி அருகே வல்லந்தைச் சேர்ந்த அருள்பாண்டி 23, முதுகுளத்துாரில் டூவீலர் மெக்கானிக் கடை வைத்துள்ளார்.
கடந்த ஜன.25ல் இரவு முதுகுளத்துார்--அபிராமம் சாலை செல்வநாயக புரம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலரில் செல்லும்போது பின்னால் டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் வழிமறித்து அருள்பாண்டி இடம் ரூ.10 ஆயிரத்து 100, அலைபேசி ஆகியவற்றை பறித்து சென்றனர்.
முதுகுளத்துார் போலீசார் விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட நல்லுாரைச் சேர்ந்த பால்லிங்கத்தை 37, எஸ்.ஐ., சரவணன் கைது செய்தார்.
மற்றொரு நபர் செம்பொன்நெறிஞ்சி சேர்ந்த முத்துமணி 39, வேறொரு வழக்கில் பரமக்குடி சிறையில் உள்ளார்.