நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு (நவ.,24) உத்தரகோசமங்கை மங்களநாதர் சன்னதி முன்புள்ள சேத்திர கால பைரவருக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. வெற்றிலை மற்றும் செவ்வரளி மாலைகள் சூட்டப்பட்டன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்தனர்.
* சாயல்குடி அருகே மாரியூரில் உள்ள பூவேந்தியநாதர் கோயிலில் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. மூலவர் காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேக அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
*திருப்புல்லாணி அருகே புல்லாணி அம்மன் கோயிலில் காலபைரவருக்கு தனி சன்னதி உள்ளது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு அபிஷேக அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.
தேவாரம், திருவாசகப் பாடல்களை ஓதுவார் அரியமுத்து பாடினார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.