/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை
/
வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை
ADDED : மே 18, 2025 10:10 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தரகோசமங்கை :- உத்தரகோசமங்கையில் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு சுயம்பு வராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
காலை 9:00 மணிக்கு மூலவருக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. தங்க கவசம் அணிவிக்கப்பட்டு எலுமிச்சை, செவ்வரளி மாலை சாற்றப்பட்டது. பழங்கள், கிழங்கு வகைகள் நெய்வேத்தியமாக படைக்கப்பட்டது. ஏராளமான பெண்கள் எலுமிச்சை மற்றும் தேங்காயில் நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.
கோயில் வளாகத்தில் உள்ள அம்மி கல்லில் பச்சை விரலி மஞ்சள் அரைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.