ADDED : ஜூலை 13, 2025 11:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி அருகே புதுப்பட்டினம் சின்னமடம் தோப்பு கிராமத்தில் உள்ள ஆசீர்வாதப்பர் சர்ச் விழா ஜூலை 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
10 நாட்கள் நவநாள் திருப்பலியும், அதனை தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. பாதிரியார்கள் பால்ஜெயசீலன், ரபேல்அலெக்சாண்டர் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கபட்டிருந்தது.