/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நில அளவையர்கள் இல்லை கிடப்பில் உட்பிரிவு மனுக்கள்
/
நில அளவையர்கள் இல்லை கிடப்பில் உட்பிரிவு மனுக்கள்
ADDED : ஜன 25, 2025 07:07 AM
திருவாடானை : திருவாடானை தாலுகாவில் நில அளவையர்கள் இல்லாததால் பொதுமக்கள் கொடுக்கும் நில உட்பிரிவு மனுக்கள் குவிந்துள்ளன.
அரசின் விதிமுறைப்படி நில உட்பிரிவு மனு கொடுத்த குறிப்பிட்ட நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவை துறையினரின் கடமை. ஆனால் திருவாடானை தாலுகா அலுவலகத்தில் மூன்று மாதத்திற்கு மேலாகியும் 200க்கும் மேற்பட்ட உட்பிரிவு மனுக்கள் தீர்வு காணப்படாமல் கிடப்பில் உள்ளது. மனு கொடுத்தவர்கள் நில அளவை பிரிவு அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று அலைகின்றனர்.
திருவாடானை பகுதி மக்கள் கூறியதாவது:
பல கிராமங்களில் நில அளவிற்கு முறைப்படி பணம் செலுத்தி பதிவு செய்து ஏராளமான விவசாயிகள் காத்திருக்கின்றனர். அளந்து கொடுக்க அலுவலகத்திற்கு சென்று கேட்கும் போது ஒவ்வொரு முறையும் அலைக்கழிக்கப்படுகின்றனர். அதிகாரிகளிடம் கேட்டால் சர்வேயர் இல்லை என்கின்றனர். முறைப்படி பணம் செலுத்தி பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகள் அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இத் தாலுகாவில் மொத்தமுள்ள நான்கு பிர்காக்களுக்கும் சர்வே பணியிடங்கள் காலியாக உள்ளது.
முதுநிலை ஆவண வரைவாளர், புல உதவியாளர் பணியிடமும் காலியாக உள்ளது. அலுவலர்கள் இல்லாததால் உட்பிரிவு மனு கொடுத்தவர்கள் நிலத்தை அளவை செய்து பாதுகாக்க முடியவில்லை என்றனர்.

