/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரிய கண்மாய் பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் உயிருக்கு ஆபத்துங்க! இரவில் இருட்டால் திருட்டு, விபத்து அச்சத்தில் மக்கள்

ADDED : மே 11, 2025 11:24 PM

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் குறுக்கே இயைான்குடி கிராமங்களுக்கு செல்லும் வகையில் பாலம் அமைந்துள்ளது. இங்கு மின்விளக்குகள் அமைக்கப்படாததால் காரணமாக, இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவில் திருட்டு, விபத்து நடக்க வாய்ப்புள்ளதாக வாகனஓட்டிகள், மக்கள் அச்சப்படுகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலத்தை, சிவகங்கை மாவட்டம், இளையான்குடி பகுதி கிராமங்களுடன் இணைக்கும் முக்கிய இணைப்பு பாலமாக, ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயின் குறுக்கே செல்லும் பெரிய கண்மாய் பாலம் அமைந்துள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கண்மாய் பாலம் மூலம், இரு மாவட்டங்களைச் சேர்ந்த கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், பெரிய கண்மாய் பாலம் பகுதியில் மின்விளக்குகள் அமைக்கப்படாததன் காரணமாக, அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மாலை நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்திக்கும் நிலை உள்ளது.
குறிப்பாக அவ்வழியாக செல்லும் பெண்கள் திருட்டு அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும் பெரிய கண்மாய் விலக்கு, போலீஸ் செக்போஸ்ட் பகுதியிலும், மின்விளக்குகள் பராமரிப்பு இன்றி பழுதடைந்து உள்ளதால், இருள் சூழ்ந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித் துறை அதிகாரிகள் பெரிய கண்மாய் பாலம் பகுதியில் மின்விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேணடும் என மக்கள் வலியுறுத்தினர்.