/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இதம்பாடலில் மூன்று மாதங்களாக காவிரி குடிநீர் வினியோகம் இல்லை வால்வு உடைந்து தண்ணீர் வீணாகிறது

ADDED : செப் 20, 2025 11:30 PM
சிக்கல்: இதம்பாடல் கிராமத்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
சிக்கல் அருகே இதம்பாடல் ஊராட்சியில் 5000 பேருக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.2 லட்சம் லி., குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் காவிரி நீர் ஏற்றப்படுகிறது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் செல்லக்கூடிய வால்வு பகுதியில் சேதம் ஏற்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் செல்ல முடியாமல் 24 மணி நேரமும் இரவும் பகலாக வீணாகிறது.
தற்காலிகமாக நிவர்த்தி செய்ய வேண்டிய குறைகளை கண்டு கொள்ளாமல் இதம்பாடல் ஊராட்சி நிர்வாகத்தினர் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதம்பாடலை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் வால்வு பகுதி உடைந்து எந்நேரம் தண்ணீர் வீணாகிறது. இதற்கான திட்ட மதிப்பீடு செய்து பணிகளை செய்யாமல் மெத்தனமாக உள்ளனர். அரசின் கவனத்தை ஈர்க்க பொதுமக்களிடம் ரூ.10 வீதம் நிதி திரட்டி இப்பணிகளை செய்வதற்கு முடிவெடுத்துள்ளோம்.
ஒரு குடம் தண்ணீர் ரூ. 15க்கு விலைக்கு வாங்கி பயன்படுத்துவதால் வருமானத்தின் ஒரு பகுதி குடிநீருக்கே செலவிடுகிறோம். ஊராட்சி சார்பில் காவிரி குடிநீருக்காக கட்டணம் செலுத்தப்படுகிறது. எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.