/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் சாலைகளில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் அபாயம்
/
ராமேஸ்வரம் சாலைகளில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் அபாயம்
ராமேஸ்வரம் சாலைகளில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் அபாயம்
ராமேஸ்வரம் சாலைகளில் கழிவுநீர் தேங்குவதால் தொற்று நோய் அபாயம்
ADDED : ஜன 03, 2024 05:53 AM

ராமேஸ்வரம்: - ராமேஸ்வரம் நகராட்சியில் சாலைகளில் கழிவுநீர் தேங்கியதால் துர்நாற்றம் வீசுவதுடன் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் நகராட்சி 16வது வார்டில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மாணவர்கள் பள்ளி செல்லவும், மக்கள் வேலை மற்றும் அன்றாட பணிக்கு செல்ல பிரதானமாக நகராட்சி சிமென்ட் சாலை மட்டுமே உள்ளது. இந்த சாலையும் 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்ததால் பராமரிப்பின்றி பல இடங்களில் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் சாலையில் 20 மீ., துாரத்தில் தண்ணீர் தேங்கி கழிவு நீராக மாறியுள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களின் புகலிடமாகி மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
சாலையில் தேங்கும் மழைநீரை வெளியேற்றி சாலையை புதுப்பிக்க மக்கள் பலமுறை முறையிட்டும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை. இதனால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.