/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீல்சேர் இருக்கு... ஆனா இல்ல... சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்
/
வீல்சேர் இருக்கு... ஆனா இல்ல... சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்
வீல்சேர் இருக்கு... ஆனா இல்ல... சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்
வீல்சேர் இருக்கு... ஆனா இல்ல... சிரமப்படும் மாற்றுத்திறனாளிகள்
ADDED : ஜூலை 22, 2025 11:56 PM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வீல்சேர் இருந்தும் அதை பயன்படுத்தாததால் மாற்றுத்திறனாளிகள் நீண்ட துாரம் நடந்தும், தவழ்ந்தும் வந்து சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்களன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்த ராஜலு உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
இதனால் தங்கள் மனுவின் மீது உடனடி விசாரணை மேற்கொண்டு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாரந்தோறும் பொதுமக்களுடன் ஏராளமான மாற்றுத்திறனாளிகள், முதியோர்களும் வருகின்றனர். இந்நிலையில் குறைதீர்க்கும் கூட்ட வளாகத்தில் வீல்சேர் இருந்தும் அதை பயன்படுத்துவது இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
நேற்றைய மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பட்டா கேட்டு மனு அளிக்க வந்தனர். அப்போது போலீஸ் சோதனைச் சாவடியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை மாற்றுத்திறனாளிகள் நடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.
எனவே இனிவரும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி வீல்சேரை குறைதீர்க்கும் கூட்டம் முடியும் வரை பயன்பாட்டிற்கு கொண்டு வர கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.