/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி மருத்துவமனையில் 'டயாலிசிஸ்' வசதியில்லை; துாத்துக்குடி செல்லும் நிலை

ADDED : நவ 13, 2024 04:28 AM
சாயல்குடி: கடலாடி தாலுகா அரசு மருத்துவமனையில் 'டயாலிசிஸ்' வசதியின்றி தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் செலவு செய்து சிரமப்படுகின்றனர்.
சாயல்குடி, கடலாடி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், கடலாடி தாலுகா அரசு மருத்துவமனைக்கும் வருகின்றனர். அதிகரித்து வரும் சிறுநீரக பாதிப்பு நோயாளிகளுக்கு 'டயாலிசிஸ்' அமைக்க வேண்டும்.
சாயல்குடி வி.வி.ஆர்.நகர் ராஜபாண்டியன் கூறியதாவது:
நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் 'டயாலிசிஸ்' எடுக்க வேண்டியுள்ளது. அரசு அரசு மருத்துவமனையில் 'டயாலிசிஸ்' இல்லாததால் கூடுதலாக செலவழித்து தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அல்லது துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று 'டயாலிசிஸ்' சிகிச்சை பெறுகின்றனர்.
எனவே சாயல்குடி, கடலாடி அரசு மருத்துவமனைகளில் 'டயாலிசிஸ்' மையம் அமைக்க மாவட்ட நிர்வாகம், மருத்துவத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.