/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின் விளக்கு இல்லை பயணிகள் அச்சம்
/
மின் விளக்கு இல்லை பயணிகள் அச்சம்
ADDED : அக் 21, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகம் அருகே இந்திரா நகர் பஸ் ஸ்டாப் உள்ளது. இது பயணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக உள்ளது.
அரசு அலுவலர்கள் மாலையில் பணி முடிந்து ஊருக்கு செல்ல இரவில் இந்த பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கின்றனர். இங்கு போதிய மின்விளக்குகள் இன்றி இருள் சூழ்ந்துள்ளதால் பெண் பயணிகள் அச்சப்படுகின்றனர். எனவே பஸ் ஸ்டாப்பில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

