/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.1.53கோடியில் கட்டிய புதிய ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பார்க்கிங் வசதியில்லை ; எப்.சி., எடுக்க சாலையில் நிற்கும் வாகனங்களால் இடையூறு

UPDATED : ஆக 18, 2025 08:03 AM
ADDED : ஆக 17, 2025 10:59 PM

பரமக்குடி: பரமக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகம் ரூ.1 கோடியை 53 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. அவ்விடத்தில் போதிய வசதிகளின்றி, எப்.சி., வழங்க ஆவணங்களை சரிபார்க்க தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்துவதைால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மக்கள், மாணவர்கள் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
பரமக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகம் முதுகுளத்துார் ரோடு சத்தியமூர்த்தி நெசவாளர் காலனி அருகில் இயங்குகிறது. 2020 வரை பாரதி நகர் பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கியது. தொடர்ந்து முதுகுளத்துார் ரோட்டில் ரூ.1 கோடியை 53 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டடம், அலுவலக பயன்பாட்டிற்கு மட்டுமே வசதி உள்ளது. இங்கு டூவீலர் மற்றும் கார்களை இயக்கிய காண்பிக்க இடவசதி இல்லை.
மேலும் லைசென்ஸ், எப்.சி., எடுக்க வரும் வாகனங்களை நிறுத்தி வைக்க எந்த வகையான வசதியும் கிடையாது. இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஐ.டி.ஐ., வளாகத்தில் இது போன்ற பணிகள் மேற்கொள்ளும் நிலையில் உள்ளது. தொடர்ந்து கார், லாரி, பஸ் மற்றும் அனைத்து வகையான வாகனங்களும் ராமநாதபுரம் நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தி வைக்கும் சூழல் உள்ளது.
இந்த ரோட்டில் அரசு கல்லுாரி செயல்படும் நிலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் ரோட்டோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் நடுரோடு வரை நடக்கும் படி உள்ளது. இதனால் காலை, மதியம் என இரண்டு ஷிப்டுகளாக சைக்கிள் மற்றும் நடந்து செல்லும் மாணவர்கள் விபத்து அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
எனவே ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் முழுமையான இடவசதி செய்ய வேண்டும். நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்துவதை தடுப்பதுடன், ரோட்டோரத்தில் நடைமேடை அமைக்க வட்டார போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.