/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மயானத்திற்கு ரோடு இல்லை: வயல் வழியாக உடலை கொண்டு சென்ற கிராமத்தினர்

ADDED : ஜன 06, 2025 03:31 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கீழக்கோட்டையில் மயானத்திற்கு ரோடு வசதியில்லாததால் இறந்தவர் உடலை வயல்வெளியில் கிராமத்தினர் கொண்டு சென்றனர்.
பல ஆண்டுகளாக தொடரும் இந்த அவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர்.
நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்த பிறகும் பல கிராமங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளன. பரமக்குடி தாலுகா போகலுார் ஊராட்சி ஒன்றியம் கீழக்கோட்டையில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு தற்போது வரை மயானத்திற்கு ரோடு வசதியில்லை. நேற்றுமுன்தினம் (ஜன.,4) உடல்நிலை குறைவால் இறந்த மூதாட்டியின் இறுதி சடங்கிற்கு அறுவடைக்கு தயராகவுள்ள நெல்வயலில் இறங்கி உடலை உறவினர்கள் கொண்டு சென்றனர்.
கிராம மக்கள் கூறியதாவது: ஒவ்வொரு முறையும் மழை நேரங்களில் நெல் வயல்களில் 3 கி.மீ., துாரம் சகதிக்கு மத்தியில் இறந்தவர் உடலை கொண்டு செல்லும் அவலம் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக மயானத்திற்கு செல்ல தேவையான இடங்களை கையகப்படுத்தி ரோடு அமைக்க வேண்டும் என்றனர்.