/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடியில் ஐந்து முனை ரோட்டில் சிக்னல் இல்லை
/
பரமக்குடியில் ஐந்து முனை ரோட்டில் சிக்னல் இல்லை
ADDED : செப் 29, 2025 04:45 AM

பரமக்குடி: பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் சிக்னல் விளக்குகள் இல்லாமல் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தடுமாறுகின்றனர்.
பரமக்குடி நகராட்சியில் மதுரை, ராமநாதபுரம் நெடுஞ்சாலை குறுக்கிடுகிறது. இதனால் பிரதான வழித் தடமாக ஐந்து முனை ரோடு உள்ளது. இப்பகுதியில் மதுரை, ராமநாதபுரம், இளையான்குடி, முதுகுளத்துார் மற்றும் உழவர் சந்தை ரோடு என செல்கிறது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் சிக்னல் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து முதுகுளத்துார் ரயில்வே டிராக் பகுதியில் மேம்பாலம் மற்றும் சப்வே அமைக்கப்பட்டது. அப்போது ஒட்டுமொத்தமாக சிக்னலும் காணாமல் போய்விட்டது.
தற்போது ஐந்து முனை ரோடு மேலும் இருமுனை பிரிந்து, ஏழு முக்கு ரோடாக மாறி உள்ளது. இதனால் காலை, மாலை பள்ளி செல்லும் மாணவர்கள், பள்ளி வாகனங்கள், ஆட்டோ என தடுமாறுகிறது.
இவற்றை முறைப்படுத்த சிக்னல் விளக்குகள் இல்லாததால் எதிர் எதிர் முனையில் வருவோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ஆகவே துறை அதிகாரிகள் இப்பகுதியில் முழுமையான சிக்னல் விளக்குகளை அமைத்து விபத்தில்லா பயணத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.