/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதியில்லை
/
அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதியில்லை
ADDED : நவ 22, 2024 04:08 AM
திருவாடானை: திருவாடானை அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறை வசதியின்றி மாணவர்கள் சிரமம் அடைகின்றனர்.திருவாடானை தாலுகா அலுவலகம் அருகே அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. 62 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் இருவர் மாற்றுதிறானிகள். இப்பள்ளியில் கழிப்பறை வசதியில்லாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பள்ளி மேலாண்மைக் குழு தலைவி சேதுக்கரசி கூறியதாவது:
கழிப்பறை வசதியின்றி மாணவர்கள் திறந்தவெளியை தேடி அலைகின்றனர். சில நாட்களுக்கு முன்பு திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 'உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்' நடந்தது. அதில் பள்ளியில் கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கேட்டு மனு கொடுத்தோம். எந்த நடவடிக்கையும் இல்லை என்றார்.