UPDATED : நவ 26, 2026 07:06 PM
ADDED : நவ 26, 2026 07:06 PM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக பருவமழையின்றி வறட்சி நிலவியதால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இரண்டு நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்து வரும் நிலையில், நெற்பயிர்களுக்கு தேவையான மழை நீர் வயல்களில் தேங்காத நிலை உள்ளது.
பருவ மழை பெய்ததால் ஒருபுறம் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும், நெல் வயல்களில் தேவையான மழை நீர் இல்லாததால் உரமிடுதல், களை பறித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
