/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேவர் ஜெயந்தி விழா நாளை துவக்கம்: டி.ஜி.பி., ஆய்வு
/
தேவர் ஜெயந்தி விழா நாளை துவக்கம்: டி.ஜி.பி., ஆய்வு
தேவர் ஜெயந்தி விழா நாளை துவக்கம்: டி.ஜி.பி., ஆய்வு
தேவர் ஜெயந்தி விழா நாளை துவக்கம்: டி.ஜி.பி., ஆய்வு
ADDED : அக் 27, 2025 12:34 AM
கமுதி: -ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி, குருபூஜை விழா நாளை (அக்.,28) ஆன்மிக விழாவுடன் துவங்கயுள்ளது. விழா பாதுகாப்பு, முன்னேற்பாடுகள் குறித்து டி.ஜி.பி., (பொறுப்பு) வெங்கட்ராமன் நேற்று ஆய்வு செய்தார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் 118வது ஜெயந்தி, 63ம் ஆண்டு குருபூஜை விழா அக்.,28ல் ஆன்மிக விழாவுடன் துவங்குகிறது.
அக்.,29ல் அரசியல் விழாவாகவும் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மரியாதை செலுத்த உள்ளனர். அக்.,30ல் அரசு விழாவில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்கள் மரியாதை செலுத்த உள்ளனர். இதனையொட்டி பசும்பொன்னில் முன்னேற்பாடு பணிகள் குறித்து டி.ஜி.பி.,(பொ) வெங்கட்ராமன் ஆய்வு செய்தார்.
அப்போது ஹெலிபேடு தளம், கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை, முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் வழித்தடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த பின் போலீசாரிடம் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா, டி.ஐ.ஜி., முர்த்தி, எஸ்.பி., சந்தீஷ் உடனிருந்தனர்.

