/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முப்பது கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டம் சிக்கல் ஒன்றியம் உருவாக்க வலியுறுத்தல்

ADDED : டிச 16, 2025 05:23 AM
சிக்கல்: சிக்கல் பகுதியை தனிஒன்றியமாக அறிவிக்க கோரி, வணிகர்கள் கடைகளை அடைத்தும், 30 கிராம பொதுமக்கள் சாலையில் ஒருங்கிணைந்து மனித சங்கிலி போராட்டமும் நடத்தினர்.
இப்போராட்டம் நேற்று காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடந்தது. சிக்கல், வாலிநோக்கம், கீழச்செல்வனுார் கிராமங்களில் சிக்கலை தலைமையிடமாகக் கொண்டு முதுகுளத்துார், கடலாடி ஒன்றியங்களில் இருந்து சில கிராமங்களை பிரித்து சிக்கலை தனி ஒன்றியமாக அரசு உடனே அறிவிக்க வலியுறுத்தினர். அப்பகுதி வணிகர்கள் ஒன்று சேர்ந்து கவன ஈர்ப்புக்காக கடைகளை அடைத்தனர்.
30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சம்பந்தப்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் வழிநெடுகிலும் இருபக்கங்களிலும் வரிசையாக நின்று கோஷம் எழுப்பினர்.
பொதுமக்கள் கூறியதாவது: 2015 ல் அப்போதைய முதல்வர் ஜெ., சட்டசபை விதி எண் 110ல் சிக்கல் தனி ஒன்றியமாக அறிவிக்கப்படும் என அறிவித்திருந்தார். அதை இப்போது வரை நடைமுறைப்படுத்தவில்லை.
கடலாடி ஒன்றியத்தில் இருந்து பிரிக்கப்பட்ட சாயல்குடி ஒன்றியமாக புதியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்த சிக்கல் ஒன்றியம் இந்த அறிவிப்பில் இடம் பெறவில்லை.
எனவே அரசின் கவனத்தை ஈர்க்க மனித சங்கிலி போராட்டம், கடையடைப்பில் ஈடுபட்டோம். கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோாம் என்றனர்.