/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
/
பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்
ADDED : செப் 23, 2024 05:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : திருவாடானை அருகே பாண்டுகுடியில் லட்சுமி நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது. புரட்டாசியை முன்னிட்டு இக் கோயிலில் தினமும் பூஜைகள் நடக்கிறது.
நேற்று காலை 11:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் லட்சுமிநாராயணபெருமாள் திருமண அலங்காரத்தில் மலர், மாலைகளால் அலங்கரிக்கபட்டு காட்சியளித்தனர்.
பாண்டுகுடி ஸ்ரீஹரிராம பக்த பஜனை குழுவினரின் பஜனை நடந்தது.
மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்ஸவம் அதைத்தொடர்ந்து சுவாமி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.