/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி டூ கீழக்கரை... பெயரளவில் பேட்ஜ் வொர்க் பணி
/
திருப்புல்லாணி டூ கீழக்கரை... பெயரளவில் பேட்ஜ் வொர்க் பணி
திருப்புல்லாணி டூ கீழக்கரை... பெயரளவில் பேட்ஜ் வொர்க் பணி
திருப்புல்லாணி டூ கீழக்கரை... பெயரளவில் பேட்ஜ் வொர்க் பணி
ADDED : ஜன 30, 2025 10:30 PM

துாத்துக்குடி முதல் சாயல்குடி, சிக்கல், ஏர்வாடி, கீழக்கரை, திருப்புல்லாணி வழியாக செல்லும் கிழக்கு கடற்கரை சாலை சேதமடைந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். அடிக்கடி அப்பகுதியில் விபத்துக்கள் நடந்து வந்தன.
இது குறித்து கீழக்கரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இணைந்த குழுவினர் கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.
மேலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடமும் புகார் மனு அளித்தனர். இந்நிலையில் பல்வேறு போராட்டங்கள் அறிவித்திருந்த நிலையில் பேட்ஜ் வொர்க் செய்யும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
திருப்புல்லாணியில் இருந்து கீழக்கரை வரை 7 கி.மீ., நடந்த பேட்ஜ் வொர்க் பணி பெயரளவில் செய்யப்பட்டிருந்தது. தற்காலிக ஏற்பாடாக ஜல்லிக்கற்கள், தார், மணல் கலந்த கலவையை கொட்டி பேட்ஜ் வொர்க் செய்துள்ளனர்.
தற்போது அதிகளவில் சாலையில் கனரக வாகனங்கள் கடந்து வரும் நிலையில் பெரும்பாலான பகுதிகள் மீண்டும் சேதமடைய துவங்கி உள்ளது. எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிய தார் ரோடு அமைக்கும் திட்டத்தை துவங்க வேண்டும் என்றனர்.