/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் வளர்ச்சி பணிகள் செயல்படுத்துவதில் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆர்வம்

ADDED : அக் 01, 2025 09:01 AM
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதில் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஆர்வமாக பணியாற்றி வருகின்றனர்.
திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள் உள்ளன. கிராம ஊராட்சிகளுக்கு அரசு பல வழிகளில் மானியம் வழங்குகிறது. மாநில நிதிக் குழு மானியம், ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி மானியம், மத்திய அரசின் 15 வது நிதிக் குழு போன்ற மானியம் மக்கள் தொகை, பரப்பளவு அடிப்படையில் வழங்கப்படுகின்றன.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வசுமதி, சீலிஅமலி ஜோஸ்ஸிமா, விமலா ஆகியோர் கூறியதாவது:
ஊராட்சிகளில் வரி வசூல் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 15 ஊராட்சிகளில் 100 சதவீதம் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது.
மீதமுள்ள ஊராட்சிகளில் 90 சதவீதத்திற்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது. கழிவு நீர் கால்வாய் சீரமைத்தல், தெருவிளக்கு, 100 நாள் வேலை திட்டம் மூலம் வரத்து கால்வாய் துார்வாருதல் மற்றும் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கலெக்டர் மற்றும் திட்ட இயக்குநர் உத்தரவுகளின்படி பணிகள் நடக்கிறது. ஊராட்சி செயலர்கள் ஆர்வமாக செயலாற்றி வருகின்றனர்.
கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.