/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
100 ஆண்டுகள் கடந்த திருவாடானை போலீஸ் ஸ்டேஷன் விழா நடத்த முடிவு
/
100 ஆண்டுகள் கடந்த திருவாடானை போலீஸ் ஸ்டேஷன் விழா நடத்த முடிவு
100 ஆண்டுகள் கடந்த திருவாடானை போலீஸ் ஸ்டேஷன் விழா நடத்த முடிவு
100 ஆண்டுகள் கடந்த திருவாடானை போலீஸ் ஸ்டேஷன் விழா நடத்த முடிவு
ADDED : ஜூலை 12, 2025 04:53 AM
திருவாடானை : 100 ஆண்டுகளை கடந்த திருவாடானை போலீஸ் ஸ்டேஷனுக்கு விழா கொண்டாடுங்கள் என போலீசாரிடம் எஸ்.பி., சந்தீஷ் கூறினார்.
திருவாடானை போலீஸ் ஸ்டேஷன் ஆங்கிலேயர் காலத்தில் 1925, பிப்.,ல் கட்டப்பட்டது. 1942, ஆக., 9ல் திருவாடானை சிறைச்சாலையில் அடைக்கபட்டிருந்த சுதந்திர போராட்ட வீரர் சின்ன அண்ணாமலையை விடுவிக்க பொதுமக்கள் ஒன்று திரண்டு உடைத்து, அனைவரையும் விடுவித்தனர்.
அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷன், கருவூலம் மற்றும் சிறைச்சாலைக்கு தீ வைத்தனர். இச்சம்பவம் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. திருவாடானை போலீஸ் ஸ்டேஷன் 100 ஆண்டுகளை கடந்துள்ளதால், விழா கொண்டாடுங்கள் என எஸ்.பி., சந்தீஷ் போலீசாரிடம் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் ஸ்டேஷனை எஸ்.பி., ஆய்வு செய்தார். அப்போது 100 ஆண்டுகளை கடந்துள்ளதால் விழா நடத்தவும், முக்கிய இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்களை வைக்க வேண்டும் என போலீசாரிடம் தெரிவித்தார்.