/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை சிவன் கோயில் தேரோட்டம்
/
திருவாடானை சிவன் கோயில் தேரோட்டம்
ADDED : ஜூன் 08, 2025 11:11 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானையில் சிநேகவல்லி உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழா கடந்த மே 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று மாலையில் தேரோட்டம் நடந்தது.
பிரியாவிடையுடன் ஆதிரெத்தினேஸ்வரர் அமர்ந்த தேரும், சிநேகவல்லி அம்மன் அமர்ந்த மற்றொரு தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மாலை 6:00 மணிக்கு நிலைக்கு சென்றடைந்தது. அதனைதொடர்ந்து தேர்தடம் பார்த்தல் நடந்தது.
திருவாடானை வடக்குரதவீதியில் அமைந்துள்ள கோடீஸ்வரா டெக்ஸ்டைல்ஸ் சார்பில் விழாவை காணவந்த பக்தர்களுக்கு நீர், மோர், பாதாம்பால் வழங்கபட்டது.