ADDED : ஜன 04, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் முகமதுமுக்தார் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கணேசன், ஆரோக்கிய மேரிசாராள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். 30க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததால் நன்றி அறிவிப்பு விழா நடந்தது. அரசியல் பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு ஐந்து ஆண்டுகள் சிறப்பான நிர்வாகம் செய்து பணியாற்றிய ஊராட்சி ஒன்றிய தலைவர் முகமதுமுக்தாரை பாராட்டி பேசினர்.