ADDED : ஜூலை 04, 2025 11:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை:திருவாடானையில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான வாரச்சந்தை திங்கள் தோறும் நடக்கிறது.
இச்சந்தையில் ஆடுகள், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வியாபாரம் நடைபெறும். இதற்கு வரி வசூலிக்கும் உரிமைக்காக நேற்று ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் ஏலம் நடந்தது.
ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன், செயல் அலுவலர் பாண்டியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏலம் முடிந்தவுடன் டெண்டர் பெட்டி திறக்கப்பட்டது.
அதில் ரூ.65 லட்சத்து 11 ஆயிரத்திற்கு நிர்ணயம் செய்யபட்ட செந்தில் என்பவருக்கு உரிமம் வழங்கப்பட்டது.