/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவாடானை: பொங்கல் தொகுப்புடோக்கன் வழங்கும் பணி துவக்கம்
/
திருவாடானை: பொங்கல் தொகுப்புடோக்கன் வழங்கும் பணி துவக்கம்
திருவாடானை: பொங்கல் தொகுப்புடோக்கன் வழங்கும் பணி துவக்கம்
திருவாடானை: பொங்கல் தொகுப்புடோக்கன் வழங்கும் பணி துவக்கம்
ADDED : ஜன 09, 2024 12:09 AM
திருவாடானை ; திருவாடானை தாலுகாவில் 36 ஆயிரத்து 616 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்க டோக்கன் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளது.பொங்கலை முன்னிட்டு அரிசி கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்பை அரசு வழங்குகிறது. நாளை(ஜன.10) முதல் 14 வரை பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது.
திருவாடானை தாலுகாவில் 39 ஆயிரத்து 400 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளர். இதில் அரிசி வாங்கும் கார்டுதாரர்கள் 36 ஆயிரத்து 616 பேருக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இது குறித்து திருவாடானை தாலுகா சிவில் சப்ளை அலுவலர் சிவசண்முகம் கூறியதாவது:
இத்தாலுகாவில் அந்தந்த ரேஷன் கடை விற்பனையாளர் மூலம் வரிசை எண் கொண்ட டோக்கன், கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும். அந்த டோக்கனில் பொருள் வாங்க வரும் நாட்கள் குறிக்கப்பட்டிருக்கும். அதன்படி கார்டுதாரர்கள் தங்களது ரேஷன் கடைகளுக்கு சென்று பொங்கல் தொகுப்பை வாங்கிச் செல்லலாம்.
பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்ட விபரம், ரேஷன் கார்டுதாரரின் அலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். பொதுமக்களிடையே ஏற்படும் குழப்பத்தை தவிர்ப்பதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் துவங்கியுள்ளது. கார்டுதாரர்கள் பொங்கல் தொகுப்பை வாங்கி பயன்பெறலாம் என்றார்.