/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவெற்றியூர் கோயிலில் பக்தர்களின்றி வெறிச்சோடியது
/
திருவெற்றியூர் கோயிலில் பக்தர்களின்றி வெறிச்சோடியது
திருவெற்றியூர் கோயிலில் பக்தர்களின்றி வெறிச்சோடியது
திருவெற்றியூர் கோயிலில் பக்தர்களின்றி வெறிச்சோடியது
ADDED : அக் 12, 2025 04:29 AM

திருவாடானை : திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் கோயில் உள்ளது. முதல் நாள் இரவு தங்கி மறுநாள் காலையில் சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு. வெள்ளி, செவ்வாய் உள்ளிட்ட அனைத்து நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
வெளிமாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில் சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணபட்டது. கோயில் ஊழியர்கள் கூறுகையில், தீபாவளி நெருங்குவதால் பண்டிகையை கொண்டாடும் வகையில் புத்தாடை வாங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கூட்டம் குறைவாக உள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்றனர்.