/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருவெற்றியூர் கோயில் முடி காணிக்கை ஏலம்
/
திருவெற்றியூர் கோயில் முடி காணிக்கை ஏலம்
ADDED : ஜூன் 04, 2025 12:52 AM
திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம் பிரியாள் கோயில் உள்ளது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயிலில் முடி காணிக்கை மற்றும் கோழி, சேவல் பொது ஏலம் நேற்று நடந்தது.
பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி 12 மாதங்கள் சேகரித்து வைக்கப்பட்ட முடி ரூ.42 லட்சத்து 60 ஆயிரத்திற்கும், 25 ஜூலை 1 முதல் 30 ஜூன் 2026 வரை முடிசேகர உரிமம் ரூ. 56 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் ஏலம் விடப்பட்டது.
அதே போல் கோழி, சேவல் சேகரம் ரூ. 28 லட்சத்து 70 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது. ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, தேவஸ்தான மேலாளர் இளங்கோ, சிரஸ்தார் சுப்பிரமணியன், கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன், சரக ஆய்வாளர் கண்ணன் மற்றும் கிராமத்தினர் பங்கேற்றனர்.