/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலையில் முட்புதர்கள் ஆக்கிரமிப்பு
/
பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலையில் முட்புதர்கள் ஆக்கிரமிப்பு
பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலையில் முட்புதர்கள் ஆக்கிரமிப்பு
பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலையில் முட்புதர்கள் ஆக்கிரமிப்பு
ADDED : ஜன 14, 2025 05:04 AM
கீழக்கரை: கீழக்கரை அருகே தில்லையேந்தல் ஊராட்சிக்குட்பட்ட மருதன் தோப்பு பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இதற்குரிய சாலையில் இருபுறங்களிலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
கீழக்கரை தாலுகா பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வேலை நேரங்களில் நாள்தோறும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கார் மற்றும் டூவீலர்களில் வருகின்றனர்.
கீழக்கரை முனீஸ்வரன் பகுதியில் இருந்து மருதன்தோப்பு வழியாக வரக்கூடிய சாலையின் இரு புறங்களிலும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
இதனால் முக்கிய ஆவணங்கள் கொண்டு செல்வதில் அச்சம் ஏற்படுகிறது. எனவே தில்லையேந்தல் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.