ADDED : பிப் 27, 2024 07:48 AM
தொண்டி : தொண்டி -- மதுரைக்கு விரைவு பஸ் இயக்குவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொண்டியிலிருந்து மதுரை 110 கி.மீ.,ல் உள்ளது. பயண நேரம் மூன்றரை மணி நேரம் ஆகிறது. ஏராளமான பஸ் ஸ்டாப்புகள் இருப்பதால் அவசரத்திற்கு பயணிகள் விரைந்து செல்ல முடியவில்லை. இது குறித்து தொண்டி மக்கள் கூறியதாவது:
தொண்டி பகுதியை சேர்ந்தவர்கள் வியாபாரம்,மருத்துவம் மற்றும் உயர் கல்விக்காக மதுரை செல்வது அத்தியாவசியமாக உள்ளது.
அவசர சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள்அங்குள்ள மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.
இதன்படி 110 கி.மீ., செல்ல மூன்றரை மணி நேரம் ஆவதால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்ட ஸ்டாப்புகளில் பஸ்கள் நின்று செல்வதால் அதிக நேரமாகிறது.
ஆகவே திருவாடானை, காளையார்கோவில், சிவகங்கை ஆகிய ஊர்களில் மட்டும் நின்று செல்லும்வகையில் தொண்டியிலிருந்து மதுரைக்கு விரைவு பஸ்கள் இயக்க வேண்டும் என்றனர்.
