/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி பேரூராட்சி சாதாரண கூட்டம்
/
தொண்டி பேரூராட்சி சாதாரண கூட்டம்
ADDED : அக் 31, 2025 11:42 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: தொண்டி பேரூராட்சி கூட்டம் தலைவர் ஷாஜகான்பானு தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அழகுராணி, செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சிக்கு வழங்கப்பட்ட பேட்டரி வாகனங்கள் பழுதாகி விட்டதால் குப்பை சேகரிப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே 4 மின்கல வாகனங்கள் வாங்குவது, பருவமழை துவங்கியதால் பொதுசுகாதார தளவாட பொருட்கள் வாங்குவது போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

