/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்ய மூவிதழ் அடங்கல் வழங்கப்படும்: கலெக்டர் தகவல்

ADDED : அக் 17, 2024 05:13 AM
திருவாடானை: விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்ய மூவிதழ் அடங்கல் வழங்கப்படும் என்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறினார்.திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உங்கள் ஊரில் உங்களை தேடி முகாம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடந்தது. தாசில்தார் அமர்நாத், பி.டி.ஓ.,க்கள் கணேசன், ஆரோக்கிய மேரிசாராள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:
விவசாயிகள் பயிர் இன்சூரன்ஸ் பதிவு செய்யும் பணிகள் துவங்க உள்ளது. அவர்களுக்கு மூவிதழ் அடங்கல் மூலம் இன்சூரன்ஸ் பதிவு செய்யப்படும். மூவிதழ் அடங்கல் அனைத்து வி.ஏ.ஓ., க்களுக்கும் வழங்கும் வகையில் அதற்கான பணிகள் விரைவில் துவங்கும். அதன் மூலம் விவசாயிகள் இன்சூரன்ஸ் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.