தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ டூவீலர் மீது கார் மோதி மூன்று பேர் பலி

 டூவீலர் மீது கார் மோதி மூன்று பேர் பலி

 டூவீலர் மீது கார் மோதி மூன்று பேர் பலி


ADDED : ஜூன் 06, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 11:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி இந்திரா நகர் மாடசாமி 60. மகள் பஞ்சவர்ணம் 25, மருமகன் புல்லாணி 30, தேவிபட்டினத்தில் வசித்து வந்தனர். குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்கள் விற்பது, மற்றும் கூலித்தொழில் உள்ளிட்ட வேலைகளை செய்தனர். நேற்று மாடசாமி டூவீலர் ஓட்டிச் சென்றார். பின்னால் பஞ்சவர்ணம், புல்லாணி அமர்ந்திருந்தனர். மதியம் 2:00 மணிக்கு ஏர்வாடி சென்று விட்டு மூவரும் ஒரே டூவீலரில் கிழக்கு கடற்கரைச் சாலையில் திருப்புல்லாணி நோக்கி வந்தனர்.

ஏர்வாடி - கொம்பூதி, கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை மும்முனை சந்திப்பில் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிரே வந்த கார் மோதியது. இதில் மூவரும் துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.

காரை ஓட்டிய கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டை மன்சூர் அலி 42, மீது போலீசார் வழக்கு பதிந்தனர். மூவரின் உடல்களும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us