UPDATED : அக் 06, 2026 10:10 PM
ADDED : அக் 06, 2026 07:06 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் சார்பதிவாளர் அலுவலகத்தில் மூன்று சக்கர வீல் சேர் சேதமடைந்துள்ளதால் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து நிலம், வீடு கட்டடங்கள் உள்ளிட்ட அசையா சொத்துகளின் விற்பனை, வாங்குதல், தான செட்டில் மென்ட், அடமானம், குத்தகை ஒப்பந்த ஆவணங்கள் பதிவு, திருமண பதிவு, பழைய ஆவணங்களின் நகல்களை வழங்குதல், சொத்தின் வில்லங்கச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினந்தோறும் அலுவலகத்திற்கு பலர் வந்து செல்கின்றனர்.
கடந்த சில மாதத்திற்கு முன்பு மாற்றுத்திறனாளிகளை அழைத்துச் செல்வதற்காக மூன்று சக்கர வில்சேர் வழங்கப்பட்டுள்ளது. தற்போது முறையாக பராமரிப்பின்றி உள்ளதால் வீல்சேர் சேதமடைந்து காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் சிரமப்படுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி வீல்சேரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
