/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறுதொழிலுக்கு 6 சதவிகிதம் வட்டி மானியம் அனுமதி கேட்கும் 'டிக்' நிறுவனம்
/
சிறுதொழிலுக்கு 6 சதவிகிதம் வட்டி மானியம் அனுமதி கேட்கும் 'டிக்' நிறுவனம்
சிறுதொழிலுக்கு 6 சதவிகிதம் வட்டி மானியம் அனுமதி கேட்கும் 'டிக்' நிறுவனம்
சிறுதொழிலுக்கு 6 சதவிகிதம் வட்டி மானியம் அனுமதி கேட்கும் 'டிக்' நிறுவனம்
ADDED : ஆக 16, 2025 11:36 PM
சென்னை:சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 6 சதவீத வட்டி மானியம் வழங்க, 'டிக்' எனப்படும் தமிழக தொழில் முதலீட்டு கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழக அரசின் தொழில் துறையின் கீழ், 'டிக்' எனப்படும் தமிழக தொழில் முதலீட்டு கழகம் செயல்படுகிறது.
இந்நிறுவனம் சிறு, குறு, நடுத்தர பிரிவில் புதிதாக தொழில் துவங்கவும், ஏற்கனவே உள்ள தொழிலை விரிவுபடுத்த உதவும் வகையில், தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குகிறது.
நடப்பாண்டில் வழங்கப்படும் கடன்களுக்கு, 5,000 ரூபாயில் இருந்து, 10 லட்சம் ரூபாய் வரையிலான ஆய்வு கட்டணத்தை முழுதுமாக தள்ளுபடி செய்து, ஏற்கனவே டிக் அறிவித்துள்ளது.
தற்போது, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு மட்டும், 6 சதவீதம் வட்டி மானியம் வழங்க முடிவு செய்துள்ளது.
இதன் வாயிலாக, கடன் வாங்கியவர்கள் தவணையை ஒழுங்காக செலுத்தும்பட்சத்தில் ஆண்டின் முடிவில், மொத்தமாக செலுத்தப்பட்ட வட்டியில், 6 சதவீதம் அசல் தொகையில் வரவு வைக்கப்படும்.
இதுகுறித்து, தொழில் முனைவோர் கூறியதாவது:
மின் கட்டணம் உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
எங்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, வட்டி மானிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும்; அதற்கு அரசிடம் அனுமதி கேட்கப்பட்டு இருப்பதாகவும், டிக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு, அரசு விரைவாக அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தவணையை சரியாகச் செலுத்தினால், ஆண்டு முடிவில், செலுத்திய வட்டியின் 6% தொகையை, அசல் தொகையில் வரவு வைக்கப்படும்

